மதுரை மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி கழகத்தின் சார்பில் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக இருக்கும் வரை அண்ணாவின் பெயரை மறைத்து விடும் என்பதால், எம்ஜிஆர் இந்த காட்சியை அண்ணாதிமுக என பெயர் வைத்தார். நேற்று வரை நயன்தாரா, திரிஷா பின்னாடி இருந்தவருக்கு இன்றைக்கு துணை முதல்வர் பதவி” என விமர்சித்துள்ளார்.