தந்தையின் கண் முன்னே உயிரிழந்த மகள் (வீடியோ)

107955பார்த்தது
குஜராத் மாவட்டம் பருச் மாவட்டத்தில் நடந்த ஒரு கோர விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வனத்துறையில் பணியாற்றிவரும் கவிதா காந்திலால் கோஹில் (32) என்ற பெண் தனது தந்தையுடன் ஸ்கூட்டரில் தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு வளைவில் வேகமாக திரும்பிய டிப்பர் லாரி இவர்களது ஸ்கூட்டருக்கு அருகே இடிப்பது போல் வந்ததும் இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது தனது தந்தையின் கண் முன்னே கவிதாவின் மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி