வேப்பூர் அடுத்துள்ள விநாயகநந்தல் கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் கார்த்திக் இவர் சம்பவத்தன்று இரவு பாசார் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து டிராக்டரில் கிராவல் மண் ஏற்றி விற்பனைக்காக கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரோந்து சுற்றி வந்த வேப்பூர் காவல் துறையினர் டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து கார்த்திக்கை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.