தமிழ்நாடு அரசின் 2024 – 2025 நிதிநிலை அறிக்கை: விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை, மாணவர்களின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும்
2024 - 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (19. 02. 2024) சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். முக்கியமாக, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இணைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கி மகளிர் நலன், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் "மாபெரும் 7 தமிழ் கனவுகள்" என தமிழ்நாடு அரசு பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, 2024 – 2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அரசு பள்ளிகளில் படித்த உயர்கல்விக்கு செல்லும் ஆண் பிள்ளைகளுக்கும் ரூ. 1, 000 வழங்கும் திட்டம் என்ற அறிவிப்பின் மூலம், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். முதலமைச்சர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டியுள்ள குறைகளை கவனத்தில் கொண்டு அதனை களைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.