தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ 25 க்கும் மேற்பட்ட கவனஈர்ப்பு தீர்மானங்களை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அளித்துள்ளார். அதில் எம்எல்ஏ அளித்த கவனஈர்ப்பு தீர்மானங்களில் மூன்று தீர்மானங்கள் நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை, அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதை கைவிடக்கோரியும் போராடும் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது குறித்தும், வேகமாக பரவிவரும் HMPV வைரஸ் பரவலை கட்டுப்படுத்தக் கோரியும் ஆகிய விவாதங்களில் பங்கேற்று முன்வைத்த கருத்துக்கள் என செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.