வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காற்றினால் ஒரு சில இடங்களில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.