மச்சானா? தங்கர்பச்சானா? - அன்புமணி சொன்ன விஷயம்

3972பார்த்தது
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பண்ருட்டியில் பேசினார்.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் ஆவார். இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் மச்சானா பச்சானானு கேட்டால், எனக்கு பச்சான் தான் என்றார். தங்கர்பச்சானுக்காக தன் சொந்த மச்சானையே தாக்கி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய இந்த வீடியோ பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி