‘கிழக்குச் சீமையிலே’ வசனம் பேசி வாக்கு கேட்ட ராதிகா

47307பார்த்தது
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா நேற்று (ஏப்ரல் 2) திருமங்கலதில் தனது கணவர் சரத்குமாருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, “உங்கள் சகோதரியாக, அக்காவாக இருக்கும் எனக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தால் இந்த தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்” என்றார். அப்போது, அங்கிருந்த பெண்கள், ‘கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த விருமாயி போல் பேசி காட்டுங்கள்’ என கேட்டனர். உடனே ராதிகாவும் அந்த கதாபாத்திரம் போல் பேசி மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். இதனை ரசித்த பொதுமக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். நன்றி: ராஜ் டிவி

தொடர்புடைய செய்தி