கும்மி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அண்ணாமலை

47451பார்த்தது
கோயம்புத்தூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை நேற்று (ஏப்ரல் 2) வெள்ளக்கிணறு பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி மக்கள் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி கும்மி நடனமாடி வரவேற்றனர். இதனைப் பார்த்து குஷியான அண்ணாமலை மக்களுடன் சேர்ந்து நடனமாடினார். தொடர்ந்து பேசிய அவர், “வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. இந்த கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்

தொடர்புடைய செய்தி