அதிமுக குறித்து நடிகை காயத்ரி ரகுராம் பெருமிதம்

58பார்த்தது
அதிமுக குறித்து நடிகை காயத்ரி ரகுராம் பெருமிதம்
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜான்சி ராணியை ஆதரித்து நேற்று நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக கட்சியில் வாரிசு அரசியல் இல்லை, பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி