தீர்த்தனகிரி: அமைச்சர் தலைமையில் முகவர்கள் கூட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம், தீர்த்தனகிரி, சிறுபாளையூர் ஆகிய ஊராட்சி பகுதிகளின் வாக்கு சாவடி நிலை முகவர்கள் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் தீர்த்தனகிரி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.