கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆறாவது நாள் உற்சாகமாக முருகன் அம்மனிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் இன்று கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.