கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு ஐந்தாம் நாள் உற்சாகமாக யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.