விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலூர் சோழதரம் வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்திட வி கே டி சாலை தாமத வேலையினால் ஏற்படும் விபத்துகளை தடுத்திட சாலை பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 9/11/2024 இன்று வடலூரில் சாலை மறியல் போராட்டம் ஒன்றிய செயலாளர் எம் பி தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. வடலூர் நகர செயலாளர் ஆர் இளங்கோவன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி கிருஷ்ணமூர்த்தி வி. மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில குழு உறுப்பினர் தோழர் எஸ் ஜி ரமேஷ் பாபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.