கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் ஆலயம் மற்றும் முத்துமாரியம்மன் ஆலயம் மண்டல அபிஷேக பூர்த்தி விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டுமல்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் இரவு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற உள்ளது.