கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, 20 சதவீத போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிற்சங்கத்தினர் மெயின் பஜார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.