கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி நிறுவனத்திற்கு நிலம், வீடு, மனை கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தர வேண்டிய வேலையை வழங்க வேண்டும் என 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நெய்வேலி என்எல்சி கார்ப்பரேட் தலைமை அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.