மின் விளக்கு வசதி கேட்டு மனு அளிப்பு

54பார்த்தது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கங்கைகொண்டான் பேரூராட்சி மற்றும் பழைய நெய்வேலி ஊராட்சி சில பகுதிகளுக்கு அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை வழங்கிவரும் சூழ்நிலையில் இந்த பகுதியில் மின்விளக்கு இல்லாமல் இருக்கும் கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் மற்றும் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஜோதிபாஸ் கங்கைகொண்டான் பேரூராட்சி கவுன்சிலர் லீமாரோசி ஆகியோர் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுவில் கங்கைகொண்டான் பேரூராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியில் மின்சாரம் சாலை கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து தர வேண்டும் மேலும் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் விஷ ஐந்துக்கள் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவே உடனடியாக மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சிகாமணி மீனாட்சி இளவரசி விமல் பாலுஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி