கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி நிறுவனத்தின் சுரங்கம் இரண்டில் மாணிக்கம் காண்ட்ராக்டில் பணிபுரிந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டதால், நெய்வேலி சுரங்கம் 2 முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நெய்வேலி என். எல். சி அதிகாரிகள் தலையிட்டு தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.