மந்தாரக்குப்பம்: வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

83பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.

நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, பிம்பசுத்தி நாடி சந்தனம். சகஸ்கர நாம அர்ச்சனை, மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்று கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் இன்று முதல் தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி