நெய்வேலி என்எல்சியில் தர்ணா போராட்டம்

57பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக வீடு, நிலம் கொடுத்த சுமாா் 50 ற்கும் மேற்பட்டோா், என்எல்சி சுரங்கம் இரண்டில் தோட்டக்கலை துறையில் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளா்களாக பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் தங்களுக்கு நிரந்தரமாக வேலை வழங்க வேண்டும், ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2-இல் தோட்டக் கலையில் பணியாற்றும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளா்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி