கடலூர் மாவட்டம் உய்யகொண்டராவி பகுதியை சேர்ந்த தர்மசிவம் மகள் சுகந்தி சேப்பாளநத்தம் உயர்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் மருதூரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் வடலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.