ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரின் பையில் இருந்து ரூ.3,000 திருடிய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் எர்ணாகுளம் அடுத்த ஆலுவா காவல்நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. சலீமை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இறந்தவரின் பையில் இருந்த ரூ.3,000 பணம், பொருட்களையும் திருடியுள்ளார். காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் இது தெரியவந்தது. ராஜஸ்தானை சேர்ந்த நபர் கடந்த 19ஆம் தேதி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.