பிரதமரின் இன்டர்ன்ஷிப் (PM Internship Scheme) என்பது பள்ளி, கல்லூரி முடித்த மாணவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சியை கொடுக்கும் ஒரு முன்மாதிரி திட்டமாகும். மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். SSLC. ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த 21-24 வயதினர் இந்த திட்டத்தில் சேரலாம். pminternship.mca.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.5000 ஊக்க தொகையும், தற்செயலான செலவுகளுக்கு ரூ.6000 ஒரு முறை வழங்கப்படும்.