டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். "திரைமறைவில் யாரையும் சந்தித்து பேசவேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. அதிமுகவுடன், பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது, அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது" என கூறியுள்ளார்.