கடலூர் அடுத்த நண்பர்கள் நகர் சாலை மற்றும் செம்மண்டலம் - நெல்லிக்குப்பம் சாலையை இணைக்கும் முகப்பு பகுதி வேகத்தடை அருகே உள்ள சாலை பள்ளமும், மேடாக காணப்பட்டு போக்குவரத்துக்கு பொருத்தமற்ற நிலையில் இருந்தது.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கிருந்த பள்ளம், மேடு சிமெண்ட் கலவை மூலம் சீர் செய்யப்பட்டு அதனை உலர வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.