கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அருகே சோனங்குப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் 88ஆம் ஆண்டு மாசிமக திருவிழாவை முன்னிட்டு ஐந்தாவது நாள் உற்சாகமாக நேற்று இரவு கருட சேவை கஜேந்திர மோட்சத்தில் மின் விளக்கு அலங்காரத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.