தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வியாபாரம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிமம் பெற வேண்டியது அவசியமாக உள்ள நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்னும் விற்பனைக்கான உரிமம் வழங்கவில்லை.
இந்த நிலையில் பட்டாசு வியாபாரம் செய்ய தற்காலிக உரிமங்களை தாமதிக்காமல் வழங்க வேண்டுமென வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலூர் மண்டல தலைவர் சண்முகம் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மனு அளித்தனர்.