சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் தேரோட்டம், தரிசனத்திற்கு வெளியே வந்ததால் கனக சபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய கடந்த 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தீட்சிதர்கள் தடை விதித்தனர்.
இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் ஆருத்ரா தரிசன உற்சவம் முடிவுபெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மீண்டும் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.