புவனகிரி: சாலையில் அமர்ந்து போராட்டம்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருண்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக கட்சியினரை கைது செய்ய கோரி புவனகிரி நான்கு முனை சாலையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருண்மொழி, மாவட்ட செயலாளர்கள் சண்முகசுந்தரம், ரவிச்சந்திரன், செல்வமகேஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.