சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.19 கோடி மதிப்பில் 85 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் நவீன மீன் அங்காடியை, வருகிற 10ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். மீன் கழிவுகளை வெளியேற்ற 28,000 லிட்டர் கொள்ளவுடன் கூடிய சுத்திகரிப்பு நிலையம், குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள், வழிகாட்டுப் பலகைகள், கழிப்பிட வசதி, வாகன நிறுத்தம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.