குளவி கொட்டி 108 வயது மூதாட்டியும், மகளும் பலி

84பார்த்தது
குளவி கொட்டி 108 வயது மூதாட்டியும், மகளும் பலி
குளவி கொட்டியதில் 108 வயது மூதாட்டியும் அவரது 80 வயது மகளும் உயிரிழந்துள்ளனர். கோட்டயம் எருமேலியில் கடந்த செவ்வாய் மாலை 4 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 108 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலையும், அவரது மகள் தங்கம்மா (80) மதியமும் இறந்தனர். காயமடைந்த உதவியாளர் ஜாய் (75), பக்கத்து வீட்டுக்காரர் சிவதர்சன் (24) ஆகியோர் முண்டக்கயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி