சேத்தியாத்தோப்பு: வாய்க்காலில் இறங்கிய அரசுப் பேருந்து
சென்னையில் இருந்து 40 பயணிகளுடன் சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. பஸ்சை ராமலிங்கம் என்பவர் ஓட்டினார். அந்த பேருந்து நேற்று(அக்.25) காலை புவனகிரி, சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடை அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.