சிறுபாலையூரில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

70பார்த்தது
சிறுபாலையூரில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமணன் கூலித் தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ரமணன், கடந்த 22 ஆம் தேதி வீட்டிலிருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி