தெலங்கானா சிரிசில்லா நகரில் உள்ள கட்ட மைசம்மா கோயிலில் அருகே மரத்தில் அமர்ந்திருந்த காகங்கள், பாதையில் செல்லும் ஆண்களை கொத்தி தாக்கியுள்ளன. ஆனால், அந்த காகங்கள் பெண்களிடம் மட்டும் செல்லவில்லை. இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவைகள் பெண் காகங்கள் என்றும் ஆண் மீது வெறுப்பு இருப்பதால் இவ்வாறு செய்வதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.