வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மகளிர் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், “இன்று மகளிர் தினம். நமது அரசு எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க முடிவு செய்துள்ளது. இது லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் பொருளாதார சுமையை வெகுவாக குறைக்கும். பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் விலை குறைவாக கிடைப்பதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும் என பதிவிட்டுள்ளார்.