திருச்சி SRM ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கான குத்தகை காலம் முடிந்தும் ஹோட்டலை நிர்வாகம் காலி செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஹோட்டலுக்கு சீல் வைக்க வந்த சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன், ஹோட்டல் சார்பில் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும்,
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் சீல் வைக்க கூடாது என ஹோட்டல் தரப்பில் கூறப்பட்டது. நிலத்தில் ரூ.200 கோடி வரை முதலீடு செய்திருப்பதால் நிலத்திற்கு உண்டான தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் ஹோட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.