“அதிமுக கட்சியை காப்பாற்றுவது முக்கியம்” - ஓபிஎஸ்

73பார்த்தது
“அதிமுக கட்சியை காப்பாற்றுவது முக்கியம்” - ஓபிஎஸ்
அதிமுக கட்சியை காப்பாற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "அதிமுக பிளவுற்று கிடக்கும் இதே நிலையோடு, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டு, 11வது தொடர் தோல்வியை வரவு வைத்துக்கொள்வதா?. கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்துடன் சிந்திக்காமல், கட்சியை கைப்பற்றுவதைவிட கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்ற பெருந்தன்மையான முடிவை எடுக்க வேண்டும்" என அதிமுகவினருக்கு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி