விஜய் கட்சியின் செயலி இன்று அறிமுகம்

568பார்த்தது
விஜய் கட்சியின் செயலி இன்று அறிமுகம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைகான செயலி மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராக விஜய் இன்று இணைய உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் இணையும் போட்டோ அல்லது வீடியோ வெளியாக வாய்ப்பு உள்ளது. நேற்று உறுப்பினர் சேர்க்கை அணியை அறிவித்த நிலையில், இன்று பனையூரில் கூட்டம் நடைபெறுகிறது. 'தமிழக வெற்றிக் கழகம்' மூலம் பல புதிய நல திட்டங்களை மக்களுக்காக செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி