திமுகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்

67பார்த்தது
திமுகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்
தென்காசி தொகுதியில் திமுக - காங்கிரஸ் இடையே தேர்தல் பிரச்சார பணிகளில் இணக்கம் இல்லை எனக் கூறப்படுகிறது. திமுகவினர், பிரச்சாரத்திற்கு கூட காங்கிரஸ் கட்சியினரை அழைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சியினர், திமுகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியான திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி