காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்பத்தினருடன் தனி பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். மேலும், மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் 10 பேரும் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு கூட்டத்தில், கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.