பெண்ணின் உடலமைப்பு குறித்து கமெண்ட் அடிப்பது தண்டனைக்குரிய பாலியல் துன்புறுத்தல் குற்றம் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண் அரசு ஊழியர் ஒருவர், பல ஆண்டுகளாக தன் உடல் அமைப்பு குறித்து ஆபாசமாக கமெண்ட் அடித்து வருகிறார் என தனது சக ஆண் ஊழியர் மீது புகாரளித்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்நபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உடல் அமைப்பு குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கமெண்ட் அடிப்பதும் பாலியல் துன்புறுத்தல் குற்றம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.