இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஆக.5ம் தேதி ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், வங்கதேசத்திலிருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா மற்றும் 96 பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ததாக வங்கதேச இடைக்கால அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதைத்தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் விசாவை இந்திய அரசு நீட்டித்துள்ளது.