கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட கருமலை தடுப்பணை பகுதியில் இருந்து வால்பாறை நகராட்சி குடி தண்ணீர் குழாய் கருமலை பச்சைமலை நடுமலை வழியாக குடி தண்ணீர் குழாய் பதித்து வரும் நகராட்சி குத்தகைதாரர்களின் நடவடிக்கையால் அடிக்கடி நடுமலை சாலை விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இன்று நடுமலை சமாதானபுரம் அருகில் குளி தோண்டப்பட்டு பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி குத்தகை பணியாளர்கள் மற்றும் நேற்று அதே பகுதியில் சாலை சிக்கிய அரசு பேருந்து. குடி தண்ணீர் குழாய் பதித்து உடனே சாலையை சரி செய்வதற்கு பள்ளி மாணவர்கள் இன்று வால்பாறை நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.