கோவையில் புதிதாக அமைக்கபட்டு நேற்று முதல்வரால் திறக்கப்பட்ட உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டத்திற்க்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை கொடுத்தார் என்றும் அந்த வகையில் கோவை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டபேரவையில் அறிவித்தார் என கூறினார்.
அதன் தொடர்ச்சியாக கூடுதல் நிதி ஒதுக்கி எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலம் கட்ட உறுதுணையாக இருந்ததாகவும் அவருக்கு கோவை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.