தர்மபுரி: பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரகாஷ . இவருக்கு 21 வயது திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதை அவரது நண்பரான விஜய் பிரபுவுக்கு பகிர்ந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். மனமுடைந்த அந்த பெண் நேற்று விஷம் சாப்பிட்ட நிலையில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.