போலியாக தயாரிக்கப்பட்ட பனீரில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் பால் பவுடர் அதிகளவு இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் ஆபத்து ஏற்படுகிறது. பனீரை முகர்ந்து பார்க்கும்போது லேசான பால் நறுமணம் இருக்கும். போலி பனீரில் வாசனையே இல்லாமல் இருக்கும். அல்லது ரசாயன வாசனை இருக்கும். நாம் வாங்கும் பனீர், ரப்பர் போல் இருக்கவே கூடாது, பனீரை உதிர்த்தால் உதிரவேண்டும். அந்த தன்மையில் இருந்தால் தான் அது உண்மையான பனீர் என்கின்றனர் நிபுணர்கள்.