‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், பெண் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை இன்று (டிச.26) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது” என பதிலளித்துள்ளார்.