ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளனர். கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவர்கள், மகாபலி அரசர் வேடமிட்டு, கேரள பாரம்பரிய உடை அணிந்து, அத்திப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கேரள மாநிலம் வயநாடு நிலைச்சரிவுக்கு நிவாரண நிதியாக ரூ. 1.25 லட்சத்தை கல்லூரி முதல்வரிடம் வழங்கினர்.