ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக திருவிழா

73பார்த்தது
அருள்மிகு ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா விமர்சியாக நடைபெற்றது.

கோவை டி. வி. எஸ் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக திருவிழா சிறப்பாக நடைபெற்றது. செவ்வாய்கிழமை அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்றது புதன்கிழமை
இரண்டாம் கால யாக பூஜையுடன் ஸ்ரீ அருள்மிகு தண்டு மாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். இத்திருக்கோவிலுக்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி நமக்கு வேண்டிய வரத்தை கேட்டால் கண்டிப்பாக நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி